Monday, October 28, 2013

வெளிநாட்டில் வாழ்வோர் அனுபவிக்கும் தனிமை

வெளிநாட்டில் வாழும் தமிழரில் பலர் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை தனிமைதான்.

தமிழகத்தில் நம் ஊரில் இருக்கும்போது நமக்கு சுற்றத்தார் மற்றும் நண்பர்களின் அருமை புரிவதில்லை. அவர்களை சில சமயம்  தொல்லையாககூட நினைப்போம். வெளிநாட்டிற்கு வந்தப் பிறகுதான் நமக்கு அவர்கள் அருமை புரிகிறது.

ஓய்வு நேரத்தில் நண்பர்களிடம் அரட்டை அடிக்கக்கூட முன்அனுமதி (அப்பாயின்மென்ட்) வாங்கவேண்டிய நிலமை இங்கே...


தம் பிள்ளைகளைப் பார்க்க நீண்ட நாள் விசாவில் இங்கு வரும் பெரியவர்களின் நிலமை இன்னும் மோசம். தங்கள் பிள்ளைகளோடு சிறிது காலம் தங்குவதில் மகிழ்ச்சி கொண்டாலும் நாள் ஆக ஆக எப்போது ஊருக்குச் செல்வோம் என்று ஏங்க ஆரம்பிப்பார்கள். தாங்கள் ஊருக்குத் திரும்பும் தேதியை குறித்துவைத்துக்கொண்டு ஆவலோடு காத்துக்கிடப்பார்கள்.

இந்தப் பிரச்சனையை பற்றி ஒரு கலந்துரையாடல் அன்மையில் SBS தமிழ் வானோலியில் ஒலிபரப்பானது. அதை இங்கே கேட்கலாம்:  http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/297202/t/Loneliness-All-by-by-myself

Sunday, October 27, 2013

மீண்டும் தமிழ் வலைப்பதிவின் பக்கம் ...

இது ஒரு சோதனை பதிவு...

சில வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழ் பதிவெழுத முயற்சிக்கிறேன்...